ஜகத்குரு

” தர்மார்த்த காமமோக்ஷ ப்ரதாயகாய நமோ நம: ”

வயிறு நிரம்பச் சாப்பாடு, மானத்தைக் காபாற்றிக் கொள்ளத் துணி, இருப்பதற்கு ஒரு  வீடு – இம்மாதிரியான அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும்.  இதற்கு மேல்,  ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை.  அப்படி மற்றவர்களை பறக்காமல் இருக்கச் செய்வதற்காக நாமும் எளிமையாக வாழ வேண்டும்.

நிரந்தர ஒற்றுமைக்கு வழி, சேர்ந்து உண்டு காட்டுவதல்ல, சேர்ந்து தொண்டு காட்டுவதேயாம்.  நாம் பல சமயங்களில் சொன்னதுபோல  ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் எல்லா மக்களும் சேர்ந்து எல்லா மக்களுக்குமான தொண்டுகளைச் செய்வதால் தான்,  ஒற்றுமை வளரும்.

Advertisements

கலியுக தெய்வம்

வரதட்சிணை கேட்டால் கல்யாணத்திற்கு கண்டிப்பாக மறுத்து விட வேண்டியது பிள்ளையின் கடமை.
இது குடும்பத்திற்கு, மதத்திற்கு, சமூகத்திற்கு, பெண் குலத்திற்கு, எல்லாவற்றிற்கும் செய்கிற தொண்டு.
இப்படியாக இளைஞர்கள் எல்லோரும் சபதம் செய்து அதை நிறைவேற்ற வேண்டும்.

கல்யாணத்திற்கு தங்கத்தினால் திருமாங்கல்யம் மட்டும் பண்ணினால் போதும்.  மற்ற நகைகள், வைரத்தோடு முதலியன வேண்டாம்.  பட்டும் வேண்டாம்.  நூல் கூறைப் புடவை வாங்கினால் போதும்.
எல்லாவற்றையும் விட வரதட்சணை தொலைய வேண்டும்.  ஊர்கூட்டி சாப்பாடு, பாட்டு, நாட்டியம், பந்தல் என்று விரயம் பண்ணுவது போக வேண்டும்.  நிஜமான சீர்திருத்தம், வரதட்கிணை ஒழிப்புதான்.  

மஹா பெரியவர்

“துவாதசாந்த மஹாபீட நிஷண்ணாய நமோ நம: ஓம்”

ஒவ்வோரு மதத்திலும் சின்னங்களும், மூர்த்திகளும், சடங்குகளும் வேறுபடலாம். ஆனால், அருள் தரும் பரமாத்மா மாறவில்லை. எனவே எவரும் தங்கள் மதத்தைவிட்டுவிட்டு இன்னொரு மதத்திற்கு மாறவேண்டியதில்லை. இப்படி மதம் மாறுகிறவர்கள் தங்கள் பிறந்த மதத்தை மட்டுமின்றி சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்.

நம் சொத்து என்ற நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் விருப்பப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா?  அப்படியே இறைவனின் சொத்தாகிய நாமும் நம்மை அவன் இஷ்டப்படியே நடத்தட்டும் என்று விட்டு விட்டால், நமக்கு பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம் தான்.

 

ஸ்ரீ மஹாஸ்வாமிகள்

ஸஹஜானந்த ஸம்பூர்ண ஸாகாராய நமோ நம:

வாக்குக் கட்டுப்பாட்டை வழக்கத்தில் கொண்டுவர வேண்டும். கணக்காகப் பேச வேண்டும். பிறருடைய மனதைப் புண்படுத்தாத பேச்சே பேச வேண்டும். தன் ஆத்மாவை உயர்திக் கொள்ள உதவுகிற விஷயங்களையே பேச வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மூலம், அகம்பாவத்தை விட்டுத் தொலைப்பது தான். அது தொலைந்தால் அடக்கத்தோடு, ஆனந்தத்தோடு எந்த காரியத்தையும் இறைவனுக்கு அர்பணிக்கும் புத்தியோடு செய்து நாமும் நலம் பெறலாம். உலகத்தையும் நலமாக வைத்திருக்கலாம்.

Paramacharya

ஓம் ஆஸ்ரிதாச்ரயனீயத்வ ப்ரபகாய நமோ நம:

கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்குப் பதில், கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தம் பரவும்.

வாழ்க்கைத் தரம் உயர்வது என்று சொல்லிக் கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு போவதால், வீண் ஆசை தான் அதிகமாகும். எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டில் தரித்திரம்தான் மிஞ்சும்.

தேவை என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு விட்டோமானால், அப்புறம் அதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி ஏற்படத்தான் செய்கிறது. இது திருப்திக்கும் சாந்திக்கும் கேடுதான். போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருவது.

 

ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்

 ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்ரீ சரஸ்வத்யை நமோ நமதன் உயிரே போவதாக இருந்தாலும் அறிவை எங்கிருந்தாலும் பெறப்பாடுபடுவது. அதே மாதிரி, தன் உயிரையே எடுக்கக்கூடியவனாக இருந்தாலும், தனக்குத் தெரிந்த அறிவை அவனுக்கும் கொடுப்பதுஇதுதான் இந்தியப் பண்பாடு.

 

 நம் வரையறைகளை [limitations ] புரிந்து கொண்டு நம்முடைய அறிவுரை [advice ] எங்கே எடுபடுமோ அங்கே மட்டும் நல்லது, பொல்லாததுகளைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்வது தான் நம்மாதிரி சாதாரண் நிலையினருக்கு உகந்ததாக இருக்கும்.

 

காஞ்சி மஹான்

தாயார், தகப்பனார்கள் இந்த உலகத்தில் பிறப்பைக் கொடுத்து இந்த உலகத்தில் நன்றாக வாழப் பண்ணி இந்த உலகத்திற்கான சொத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இவையெல்லாம் நிலையில்லாதவை. நிலையான சொத்தை – என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத்தைத் தருபவர் “குரு” தான்.

தனக்குப் பிடித்த ஒருவரைத் தானே தேர்ந்தெடித்து வரிப்பதுதான் “வரணம்” என்பது. சரியான குருவைத் தேர்ந்தெடுத்து அவரிடம் போய்ச் சேருவது “குருவர்ணம்”. நல்ல சீடனைத்தேடி எடுப்பது “சிஷ்ய வரணம்”.